"நீ உன்னுடைய ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் பொழுது உனது புறத்தோற்றத்தை
உலகமே உற்று நோக்கும்". ஆற்றல் என்பது அறிவியலில் நாம் படித்த வெப்ப ஆற்றலோ, இயக்க ஆற்றலோ அல்ல .மாறாக நான் எனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது. நான் எந்தத் தகுதியும் இல்லாமல் தாயின் கருவறைக்குச் செல்லும் முன் பல மில்லியன் கோடி விந்தணுக்களைக் கொண்ட எனது சகோதர /சகோதரிகளைக் கொன்று கருவறையை எனக்கு மட்டுமே அபகரித்துக் கொண்டேன்.ஆனால் இன்று எனக்கு பல விதமான தகுதிகள் இருந்தும் நான் தயங்குவது ஏன்? .இன்றைய கஷ்டத்தைக் கண்டு துவண்டு விட்டால் நாளைய மகிழ்ச்சியை இழந்து விடுவேன் என்பதை எப்போது உணர்வது.இவ்வாறு எனது தாய் நினைத்து இருந்தால் நான் இந்த உலகைக் கண்டிருப்பேனா? இச்சமூகத்தில் வாழப் பல வழிகள்
உள்ளன. எனது உடன்பிறப்புகளே நம்மை வெளியில் விடாமல் தடுப்பது எது?சரியான நேரத்தில் நீங்கள் என்னை முழுமையாக பயன்படுத்த வில்லையெனில் இழப்பு உங்களுக்குத் தான். இன்றைய வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் அனைவரும் என்னை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தியதால் தான் நமக்கும் நம் பெற்றோருக்கும் பெருமை. நீங்கள் சராசரி மனிதனாய் இருப்பதை விட சாதனை மனிதனாய் இருந்து பாருங்கள். ஆனால் இவை சிறிது கடினமே. இதற்கு நீங்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டும். இன்று பெரிய காரியங்களில் வெற்றி பெற தேவை சிறு சிறு தியாகம் மட்டுமே. தியாகம் என்பது மகாத்மாவைப் போல அறவழியில் போராட வேண்டாம். உங்களது விளையாட்டு நேரத்தைக் குறையுங்கள், தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள், சாப்பாடு அளவைக் குறைக்காமல் சாப்பிட எடுத்துக் கொள்ளும் நேரத்தை மட்டும் குறையுங்கள். மேலும் உறவினர்கள் இல்ல விழாக்களுக்குச் செல்லும் நேரத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் மாறாக உறவுகளை முறிக்க வேண்டாம். ஏனெனில் சிறு சிறு உளியைக்கொண்டு தான் பெரிய பாறைகளை உடைக்க முடியும். அது போல சிறு சிறு தியாகங்கள் தான் உங்களை சாதனை படைக்க ஊன்று கோலாய் அமையும். இவையெல்லாம் நீங்கள் முறையாக கடைப்பிடித்தீர்கள் எனில் உங்கள் வாழ்விலும் வசந்தம் வீசும், அமைதி நிலவும், உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். மேலும் உங்களுக்காக நான் மிகப்பெரிய யாகசாலை ஏற்படுத்தி அதில் சிறு சிறு விறகு குச்சிகள் போட்டு நெய் ஊற்றினால் எரியுமா என்றால் எரியாது .மாறாக தீக்குச்சி கொண்டு பற்ற வைக்க வேண்டும் அது போலவே ஆற்றல் என்பது மிகப் பெரிய தீ அதில் நீங்கள் எவ்வளவு தியாகம் செய்கிறீர்களோ அவ்வளவு தூரம் அது உங்களது புகழை பரவச் செய்யும் .எனவே நீங்கள் இருக்கும் இடத்தை அக்னியாக மாற்றுங்கள் வையகமும் வாழும். உங்களுக்குள்
எவ்வளவு ஆற்றல் மட்டும் இருந்தாலும் உங்களுக்குள் சாதிக்கணும் என்ற வெறி இருந்தால் நிச்சயமாக உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
வாழ்க தமிழ்
வாழ்க வளமுடன்
புதுகை அடிமை.
No comments:
Post a Comment