Sunday, 23 August 2015

தணலில் அழிகிறது சாதி

என் பிறப்புச் சான்றில்
சாதி இல்லை
இறப்புச் சான்றிலும்
சாதி இல்லை
வாழும் போது மட்டும்
என் அப்பனின் சாதி
இறந்த பின் எரிவது
எனது உடல் மட்டுமில்லை
என் சாதியும் தான்
தணலில் அழிகிறது.
                                   -அடிமை.

1 comment:

  1. இறந்தபின் எரிவது
    உடல்மட்டுமல்ல
    சாதியும்தான்..!
    ஆழமான வரிகள்

    ReplyDelete